Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 NOV 1960
மறைவு 07 OCT 2018
அமரர் இராமலிங்கம் தயாபரராசன்
வயது 57
அமரர் இராமலிங்கம் தயாபரராசன் 1960 - 2018 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் தயாபரராசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

இடியென வந்தசெய்தி எம்
இதயத்தை நொருக்கி உயிர் நாடி வரை
சென்று உறைந்ததே
இனி எங்கே காண்போம் உங்களை!

கனிவான பேச்சும், 
புன்னகை தவழும் பூ முகமும்
இன்று அடங்கிப் போனதும் எங்கே?
கதி கலங்கி நிற்கின்றோம்..

உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
 அழியாது இனிய நினைவலைகள்!
 கண்முன்னே வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனாலும்
என்றும் எம் இதயங்களில்,
உயிராய் கலந்திருப்பீர்கள் அப்பா

மீளாத்துயில் கொண்டு எம்மை
எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற
எங்கள் அன்புத் தெய்வமே
கலையாத நினைவுகளுடன் உதிரும்
கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
கண்ணீரை காணிக்கையாக்குகின்றோம் !

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பெருங்காடு பதிமுத்து மாரிஅம்மனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்.

ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...

நீங்காத உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமகள், பேத்தி, தங்கை, தம்பி,
மைத்துனன்மார், மைத்துனிமார்..!

தகவல்: குடும்பத்தினர்