Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 NOV 1960
மறைவு 07 OCT 2018
அமரர் இராமலிங்கம் தயாபரராசன்
வயது 57
அமரர் இராமலிங்கம் தயாபரராசன் 1960 - 2018 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் தயாபரராசன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆண்டு ஆறு ஆனதுவோ உங்கள் முகம்
 கண்டு ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம் நிரந்தரமானதோ என்னவோ……

இன்னமும் காயவில்லை !
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க சுவாசம் இல்லை நேசிக்க
யாரும் இல்லை நெஞ்சம் எல்லாம்....

 வலிகளுடன் நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில் எம் கண்கள்
உடைந்து கண்ணீர் இன்றும் பெருகுதையா!
கண்ணை மூடி நினைக்கின்றோம்

 கண்ணிருந்தும் கடவுள் உமை
காண வரம் கொடுக்கலையே...........!
ஆண்டு ஆறு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!

கண்ணின் மணிபோல் எம்மை காத்த
அன்புத்தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் நீங்கள் பிரிந்து ஆறு வருடம்
ஓடிப் போனது இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
 ஆண்டுகள் பல சென்றாலும் நீங்காது
 உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்.........!!!!!

எம் உயிரான உமக்கு மலர்ச்சாந்தியாக
 செலுத்துகின்றோம்.....

தகவல்: குடும்பத்தினர்