யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சோமசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.
ஆலமரமாய் எமைக்காத்த
எம் அன்புத்தலைவன் ஐயா!
உங்கள் முகம் பார்க்காமல்
உங்கள் குரல் கேட்காமல்
திங்களொன்று சென்றதோ?
எத்தனை காலமானாலும்
எங்கள் நாயகன் நினைவுகள்
எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல சிற்பனை
முருகனை வேண்டிநிற்கின்றோம்.
எங்கள் குடும்பத்தலைவரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரிலும் வந்தும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.