1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமலிங்கம் சோமசுந்தரம்
1934 -
2022
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப சூரியன் மறைந்து
இன்று ஓராண்டு ஆனதே! ஆண்டுகள்
பற்பல கடந்தாலும் எங்கள்
மனத்திரையில் என்றும் எம்மோடு
பிரகாசித்துக்கொண்டிருப்பீர்கள் ஐயா!
தேடமுடியாத பொக்கிசம் மறைந்தது!
அழகிய உறவாக, அன்பு ஐயாவாக
ஆசை மாமாவாக, அருமை அப்பப்பாவாக
ஐயாவாக எங்களுடன் பிரகாசித்தீர்கள்!
ஐயா! அம்மாவுடன்
நீங்களும் இணைந்துவிட்டீர்களா?
எங்கள் கண்கள் ஏக்கத்தில்
உங்களைத் தேடுகின்றன.
ஐயா, அம்மா எங்கள் ஒவ்வொருவரின்
அசைவிலும் நீங்கள்
வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.
ஐயா! அம்மா! உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் சிற்பனை
முருகனை வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி....!
தகவல்:
குடும்பத்தினர்