Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 MAY 1924
இறப்பு 27 OCT 2011
அமரர் இராமலிங்கம் இராசையா 1924 - 2011 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் இராசையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்று ஆண்டுகள்
பத்து கடந்தாலும் அழியவில்லை உங்கள் நினைவுகள்
அகலவில்லை அப்பாவின் அன்புமுகம்!

தந்தையே ஐயா! உங்கள் சொல்லை விட
எமக்கு மந்திரம் வேறு இல்லை ஐயா!
இவ்வுலகில் நாம் உதிரும்வரை
எங்கள் உள்ளத்திலே நீங்கள்
குடிகொண்டு இருப்பீர்கள்

கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute