7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமலிங்கம் பரராசசேகரம்
முன்னாள் யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி அதிகாரி, வேலம்பராய் கண்ணகி அம்மன் கோவில் நிரந்தர தலைவர்
வயது 60
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கைதடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் பரராசசேகரம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழி மூடித்திறப்பதற்குள்
எங்கள் வீதிகளெல்லாம் தொலைந்ததென்ன??
வீசியதென்றல் பெரும்புயலாய்
எழுந்து
வீறுகொண்டு வீசியதென்ன??
சிரிக்கப்பேசி நீ சிந்திக்கத் தூண்டுவாய்!
எங்களை சிந்திக்க மறந்து
நீ சிறகடித்து பறந்தது சென்று
ஆண்டவனடி அவசரமாய் ஏன் புகுந்தாய்?
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
கண்களையே தொலைத்துவிட்டு
நாம்
கரைதாண்டிடத் துடிக்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
இராசசேகரன்(சேகர்- சகோதரர்)