5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமலிங்கம் பரராசசேகரம்
முன்னாள் யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி அதிகாரி, வேலம்பராய் கண்ணகி அம்மன் கோவில் நிரந்தர தலைவர்
வயது 60
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கைதடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் பரராசசேகரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா
பாசமுள்ள உடன்பிறப்பே
பார் புகழும் சகோதரனே!
நீ நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்தோம் பரிதவிக்கின்றோம்
உன் இழப்பை எதிர் கொண்டு
ஐந்தாண்டுகள் தான் ஆகினதோ!!
உன் உடன் பிறப்புகளுக்கோ
உன்னை இன்றி யாருமில்லை
உரிமையாய் கேட்பதற்கோ உடன் பிறப்போ
இனி நீயும் இல்லை
உன்னைப் போன்ற அண்ணாவை
இனி எப்போது நாம் பார்ப்போம்
உருகிறது எம் உள்ளம்
அண்ணா அண்ணா
என்று அழுகின்றது எம் கண்கள்
நீ இல்லா உலகை எண்ணி!
கண்ணுக்கு கண்ணான எம் சகோதரனின்
ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று
ஆண்டவரை வரம் வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
இராசசேகரன்(சேகர்- சகோதரர்)