யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் நந்தகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-10-2022
நவமணிகளில் ஒருத்தனாய் பிறந்து
அன்னை தந்தையின் அன்பான வளர்ப்பில்
பண்பானவனாய் வளர்ந்தவனே...
இளமையில்க் காதல் வளமை போல
நீயும் என்னை காதல் கொண்டாயே
பின்...
இருமனங்களின் சங்கமம் திருமணபந்தத்தல் முடிந்தது
நானும் நீனும் வாழ்ந்த வாழ்க்கையில்
செல்வங்களாய் ஆறு பிள்ளைகள் பிறந்தன
எத்தனையோ கஷ்டங்கள் நஷ்டங்கள் கவலைகள்
என்று எல்லாவற்றையும் எம் பிள்ளைகளுக்காக தாங்கிக் கொண்டாயே...
எம் பிள்ளைகள் வளர்ப்பதில் தான்
உன் முழுக்கவனமும் கொண்டு அவர்களை
படிக்க வைத்து ஆளாக்கினாய்
சில
சமயங்களில் பகைவனாய் எமக்கு தெரிந்தாய்
பாசத்தை வெளிக்காட்டாது கண்டிப்பான
தகப்பனாய் விலகியே நின்றாய்
இருந்தும்...
உன் பாசத்தை மிஞ்சிட இவ்வுலகில் யாருண்டு ?..
என் வாழ்வில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும்
எனக்கும் எம் பிள்ளைகளுக்கும் உறுதுணையாக
நின்று எமக்கு தைரியம் அளித்தவனே
ஈடு
இணையற்ற உன் இடம் இனி என்றும் வெற்றிடமே...
பிள்ளைகளுக்கு திருமண வயதாகி நின்றபோது
அவர்களுக்கு என்று துணை தேடி வளமுடன்
வாழ வழி காட்டினாயே...
காலம் கடந்தோட...
பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகளைக்
கண்டு பூரிப்படைந்தோமே
இவ்வுலக வாழ்க்கை இனி போதுமென்று
எம்மையெல்லாம் விட்டுச் சென்றாயே
எல்லாரையும்
துணையோடு விட்டு
என்னவனே...
காதலித்து கரம்பிடித்த
என்னை மட்டும்
ஏன் தனியே விட்டுச் சென்றாய்
உன்னோடு வாழ்ந்த வாழ்க்கை
ஒருவரமாய் இனிவாழும் ...
நாட்கள் உன் நினைவுகளோடு....
என்றும் உங்கள் நினைவில் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்...
அன்னாரின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலிப் பிரார்த்தனை 08-10-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
My heartfelt condolences. May his soul rest in peace. Ravi( cousin)