Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 13 NOV 1934
விண்ணில் 05 SEP 2023
அமரர் இராமையா செல்லத்துரை
உத்தரவு பெற்ற நிலஅளவையாளர் (Sri Lanka & Nigeria) நிர்வாகி, நீர்வேலி ஐடியல் கல்வி நிலையம்
வயது 88
அமரர் இராமையா செல்லத்துரை 1934 - 2023 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:25/08/2024.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமையா செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஆயிரம் கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் பப்பா!

பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்த
எமது அன்புத் தந்தையே!

அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான அறிவுரையும்,
முத்து போன்ற சிறந்த பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம்
வாருங்களே பப்பா!

உழைப்பை உரமாக்கி பாசமாய் பணிவிடைகள்
பல செய்து வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த எமது உயிர் தந்தையே!

வாசம் குன்றா வாழ்வு தந்து எமது
வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப்போல் இந்த உலகில்
யார் இருக்க முடியும் பப்பா!

உங்களின் பாசத்திற்கு
அளவேயில்லை பப்பா!
எம் கவலைகளைச் சொல்வதற்கு
வார்த்தைகளே இல்லை!
பப்பா பப்பா என்று கூப்பிட
ஏங்கிநிற்குது எங்கள் மனம்!
வாருங்கள் பப்பா!
எங்களை பாருங்கள் பப்பா
எங்களது எல்லா செயலுக்கும்
வழிகாட்டுங்கள் பப்பா!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றும் உங்கள் நினைவால் வாடும் குடும்பத்தினர்

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kandiah Family

RIPBOOK Florist
Canada 1 year ago

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 06 Sep, 2023