Clicky

மண்ணில் 15 OCT 1974
விண்ணில் 03 MAR 2022
அமரர் சிவாகரன் ரஜினி (சுசி)
வயது 47
அமரர் சிவாகரன் ரஜினி 1974 - 2022 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Varathan Poobalu 08 MAR 2022 Australia

சுசி நீ நலம் பெற மூன்றுவேளையும் இறைவனிடம் கையேந்தினேன், நீ பல்லாண்டு காலம் நலமுடன் வாழ தினமும் கடவுளை வேண்டினேன், நீ தொண்ணூறு தொண்ணூற்றைந்து வருடங்கள் நலம்பெற்று வாழ தினமும் கடவுளிடம் கையேந்தினேன். நீ நலம் பெறுவாயென நூறுவீதம் நம்பினேன். நீ முற்றாக நலம் பெற்றதும் உன்னுடன் சந்தோசமாக கதைப்பதற்கு காத்திருந்தேன். நீ சுகவீனமுற்று இருந்தபோது உன்னுடன் கதைத்தால் நீ கவலைப்படுவதை என்னால் தாங்கமுடியாது என்ற காரணத்தினால் உன்னுடன் கதைக்க எனது மனம் இடங்கொடுக்கவில்லை, இருப்பினும் உன்னைப்பற்றி விசாரித்துகொண்டே இருந்தேன். நீ நலம் பெற்றுவருகிறாய் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்து வந்தேன்.திடீரென நீ இவ்வுலகைவிட்டு சென்றுவிடுவாயென நான் ஒரு நிமிடம் கூட எண்ணியதில்லை. உன் பிரிவால் எமது மனம் நொருங்கிவிட்டது. நீ தற்போது உனது அப்பாவின் அரவணைப்பிற்காக சென்றுவிட்டாய், உனது பிள்ளைகள்,அம்மா, சகோதரன், சகோதரிகள் மற்றும் அவர்களது பிள்ளைகள், அத்தைகள், சித்தப்பாக்கள், மாமாக்கள், மச்சான்கள், மச்சாள்கள், ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள், எமது மனைவியர்கள், உனது நண்பிகள் மற்றும் உனக்கு அறிமுகமானவர்களின் மனதில் நீ என்றென்றும் வாழ்வாய். உனது அப்பாவின் இழப்பின்போது நீ கதறி அழுத தை நான் நேரில் பார்த்து மனம் துடித்தேன் ஆனால் இன்று உனது பிரிவிற்காக நாம் கதறி அழுகின்றோம். சென்று வா என்று சொல்லிட மனம் இடங்கொடுக்கவில்லை, இன்றே எழுந்து நலமுடன் எங்கள் முன் வந்திடமாட்டாயா என்று கடவுளிடம் கையேந்துகின்றோம். உனது பிரிவை எம்மால் தாங்கிகொள்ள முடியாது, உனது நினைவுகளுடனேயே நாங்கள் என்றும் வாழ்வோம். இந்த செய்தியை நான் எழுதிமுடிக்கின்றபோது எனது கண்கள் குளமாகியது என்பதை நீ அறிவாய். உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம். அன்புடன் மச்சான் வரதன் மற்றும் குடும்பத்தினர் அவுஸ்ரேலியா / சிட்னி.

Notices

மரண அறிவித்தல் Sun, 06 Mar, 2022
நன்றி நவிலல் Fri, 01 Apr, 2022