யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கட்டுவன், ஜேர்மனி Munich, கனடா Toronto, Peterborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரன் சுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:27/11/2022.
பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன பாதையில்
உங்கள் கால்தடங்களே
விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே
சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை
நாங்கள் எப்படி மறப்போம்?
நாட்கள் வருடங்கள் கடக்கட்டும்
வயதுகள் ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் இருப்பதாய்
வாழ்க்கையை தொடர்கின்றோம்.
கார்த்திகை 27ம் திகதி, காலை 11 மணியளவில் கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில், அமராரர் இராஜேந்திரன் சுப்ரமணியத்தின் 1ம் வருட ஆண்டுத்துவச நிகழ்வு இடம்பெறுகின்றது.