யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம் கிழக்கூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் றக்கா வீதி, கொழும்பு உம்பிச்சிபிளேஸ், இந்தியா Chennai, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சரஸ்வதிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழிகாட்டிவிட்டு
எம்மை விட்டு
பிரிந்தது ஏனோ?
கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய் எங்களைக் காத்தது
உங்கள் பாசம் அம்மா......!!!...!!
எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
இந்த சுகம் இனிக் கிடைக்காதே..!
அம்மா நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you all and your family. Asaiyama is a one of my favorite Aunts who fed me and raised me, when I was a child. Each...