யாழ்ப்பாணம் இல - 31, மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், அன்டர்சன் தொடர்மாடி (Anderson Flats) கொழும்பு 05, இல - 31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை இரட்னேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று கடந்து போனாலும்
உங்கள் பிரிவையோ மனம் ஏற்கவில்லை
பூதம் ஐந்துடன் கலந்து நிறைந்தாலும்
தங்கள் புன்னகையோ விட்டு அகலவில்லை
பேதம் இல்லாப் பாசம் பொழிந்த - நிறை
திங்கள் முகமோ இப்போது உதிப்பதில்லை
பாதம் பணிந்து வணங்குகின்றோம்
எங்கள் வாழ்விலோ உமையன்றி வேறு தலைவனில்லை.
கடந்த 22-05-2024 புதன்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர், அமரர். இராஜதுரை இரட்னேஸ்வரன் அவர்களது மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி ஊடாகவும், சமூக வலைதளங்கள் மற்றும் RIP BOOK மூலமாக ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்குப் பல வழிகளில் உதவி புரிந்துள்ள அன்பு நெஞ்சங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.
Hi. Guys