Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 SEP 1960
இறைவன் அடியில் 22 MAY 2024
திரு இராஜதுரை இரட்னேஸ்வரன்
உரிமையாளர், ஹொட்டேல் பிள்ளையார் இன்/பிள்ளையார் ஸ்ரோர்ஸ் - யாழ்ப்பாணம்
வயது 63
திரு இராஜதுரை இரட்னேஸ்வரன் 1960 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் இல - 31, மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், அன்டர்சன் தொடர்மாடி (Anderson Flats) கொழும்பு 05, இல - 31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை இரட்னேஸ்வரன் அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று அவரது யாழ்ப்பாண இல்லத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை(ஸ்தாபகர், பிள்ளையார் ஸ்ரோர்ஸ்) சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஞானச்சந்திரன்(நீதிபதி மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர், முல்லைத்தீவு), சரோஜினிதேவி(கனடா) தம்பதிகளின் மருமகனும்,

அமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியங்கா, மயூரிப்பிரியா, காவியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜய் அபிநந்தன்  அவர்களின் அன்பு மாமனாரும்,

இரஞ்சிதமலர், காலஞ்சென்ற யோகேஸ்வரி, செந்தமிழ்ச்செல்வி, காலஞ்சென்ற சாந்தநாயகி மற்றும் வதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகராஜா, சிவதாசன், தனஞ்செயன், இரட்ணசோதி, சற்குணேஸ்வரன், சுபோதினி, நளாயினி, ரஜினி, கேதீஸ், அரவிந்தன், சுரேஷ்குமார், விக்னபாலன், சுரேந்திரன், பிரதீபன், ரிஷாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல 31. மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அமுதினி - மனைவி
பிரியங்கா - மகள்