

யாழ்ப்பாணம் இல - 31, மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், அன்டர்சன் தொடர்மாடி (Anderson Flats) கொழும்பு 05, இல - 31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை இரட்னேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் திருவுருவே
எங்கள் உயிரே அப்பாவே
ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகள் மறைந்தாலும்
எங்கள் அன்புத் தெய்வத்தின் அளவில்லாப் பாசம்
எம் இதயத்தில் அலையலையாய் நிலைத்து நிற்கும்
வரமாக எமக்கு கிடைத்த அப்பா
வளமாக எமைக் காத்த அப்பா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர்கள்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் இதயங்களில் இருந்து கொண்டே இருக்கும்
எங்களின் இதய தெய்வமே
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எம்மை விட்டு நீங்கள் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழ்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் முதலாம் ஆண்டுத் திவசக் கிரியைகளும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் எதிர்வரும் 09-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில், இல. 31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெறவுள்ளன என அறியத்தருகின்றோம்.
Hi. Guys