யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜசிலோஜினி தயாபரன் அவர்களின் நன்றி நவிலலும்.
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
நாட்கள் 31 ஓடிவிட்டதம்மா
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை 31 நாட்கள் அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Dear Cuz your untimely passing sent chills down my spine. You are indeed an amazing mum and a wonderful teacher. May your soul rest in eternal peace. Deepest condolences and heartfelt sympathies to...