1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராஜசிங்கம் கனகாம்பிகை
வயது 81
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், நவிண்டில் கரணவாய் மத்தி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜசிங்கம் கனகாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி திகதி: 08-03-2022
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள்
என்றும் எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா.. ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய நான் வணங்குகிறேன், தனுஷாவின் அப்பம்மா. நீங்கள் எப்பொழுதும் எங்கள் எண்ணங்களில் இருப்பீர்கள்.