1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இராஜரட்ணம் உதயகுமார்
1964 -
2019
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Etzgen Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்தஇராஜரட்ணம் உதயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா..!
உறவுகளின் அன்பிற்கும்
உயிரான அன்பிற்கும்
உணரமுடியா பாசமிது
கனவினிலே உங்கள் உருவம்
கதைகளிலே உங்கள் வார்த்தை
பசுமை நிறைந்த உறவை விட்டு
போனதெங்கே! போனதெங்கே!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
உன்னை நாம் பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்றும் அழியாது!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
Our deepast Condolences. !