

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Etzgen Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் உதயகுமார் அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், சின்னம்மா(மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(செல்லா) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுஷா, ரதுஷன், ரதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பத்மசூரியன்(சுவிஸ்), லோகசூரியன்(சுவிஸ்), சுகர்ணா(பின்லாந்து), காலஞ்சென்ற கமலசூரியன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுரித்தா, சுரேந்தன், சுஜித்தா, சுகீர்த்தா, சுமித்தா, ஆயிஷா, சானுஜா, திவ்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வேணு, கஜா, நிக்சி, ராணு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சோபால்(சுவிஸ்), தீபனா(சுவிஸ்), சாந்தநாயகி(இலங்கை), வன்னியசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(கொலண்ட்), கண்ணதாசன்(இலங்கை), தங்கராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepast Condolences. !