Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 SEP 1953
இறப்பு 06 JAN 2026
திரு இராஜரட்ணம் நடேஸ்வரன்
வயது 72
திரு இராஜரட்ணம் நடேஸ்வரன் 1953 - 2026 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் நடேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்று ஆகியும் மனம் ஆற மறுக்கிறது
 சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
 செம்மையாய் வாழ்ந்த அப்பா!

 நாட்கள் 31ச் கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
 கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ

 எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால்
 விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
 அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
 அழியாது நினைவலைகள்!

 பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
 நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!

 உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.    

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 05-02-2026 வியாழக்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆதம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
37 Tonbridge Crescent
Harrow.
HA39LE

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.