கணேசண்ணாவை நாம் 1985 ஆம் ஆண்டிலிருந்து நன்கறிவோம். எமக்குப் பிள்ளைகள் பிறந்த காலத்தில், பலவிதத்திலும் அவரும் அவரின் துணைவியாரும் உதவியுள்ளார்கள். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக எமக்கு நல்ல குடும்ப நண்பராக இருந்து வந்துள்ளார். எமது மூத்த மகன் 3 மாதங்களின் முன் திருமணம் முடித்து, அம்மன் கோவிலிற்கு வழிபடத் தம்பதியராகச் சென்றபோது , தனது உடல்நிலை இயலாத நிலையிலும் , சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையில் அங்கு வந்து , மணமக்களை ஆசிர்வதித்து , பல புகைப்படங்களும் எடுத்துத் தானும் மகிழ்ந்து, எம்மையும் மகிழ்வித்ததை நன்றியுடன் நினைவு கூருகின்றோம். கணேசண்ணா அவர்கள் பலரிற்கும் பலவுதவிகள் செய்துள்ளார். ஈலிங் அம்மன் ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். தனது மனைவி பிள்ளைகளில் பாசமும் பற்றுமிக்க சிறந்த குடும்பத் தலைவனாக இருந்துள்ளார். தனது மகன்மார் இருவரின் திருமணத்தை முன்னின்று நடத்தி மகிழ்ந்தார். முத்தான மூன்று பேரப் பிள்ளைகளையும் கண்டு மகிழ்ந்துள்ளார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்னும் பொய்யா மொழிப் புலவனின் கூற்றிற்கிணங்க , கணேசண்ணா நிறைவான வாழ்வு வாழ்ந்து இறைவனை அடைந்து விட்டார். அவரை இழந்து தவிக்கும் சாரதா அக்காவிற்கும், மகன்கள் இருவரிற்கும் மருமகள்மார் ,பேரப் பிள்ளைகள், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், எங்கள் ஆழ்ந்த மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி- சாந்தி- சாந்தி. யோகன் - ஜெயா குடும்பம்- London
Our heart felt condolences