கணேஷத்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது எங்கள் குடும்பத்திற்கு ஒரு பேரிழப்பு. இவ்வையகத்தில் அவர் சாரதாக்காவுடன் சேர்ந்து அம்மன் ஆலயத்தில் பிராத்தனைகளுடன் தொண்டுகள் செய்ததை எங்களால் முழுமையாக அறியமுடிகிறது.திருப்திகரமான வாழ்க்கையை அவர் தன் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அமைத்துக் கொடுத்ததை அறிய முடிகிறது. நண்பர்களை இனிமையாக வரவேற்கும் பண்பு அவரிடம் முழுமையாக இருந்ததை எல்லோரும் அறிவர். 45 வருட அவர் உறவு எங்களை விட்டு பிரிந்து அம்மனிடம் சரணடைந்தது எங்களால் தாங்க முடியாது. அவர் உடல் எங்களைவிட்டுப் பிரிந்தாலும் அவர் நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் நிலையாக இருக்கும், அவர் குடும்பத்தினருடன் உறவினர்களாகிய நாங்களும் சேர்ந்து அவருடைய ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திப்போம் .
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Our heart felt condolences