

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசரட்ணம் அருள்சோதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலச்சுழற்சியில் ஈராண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!
சிந்திடும் புன்னகை சிதந்து மறைந்ததோ
வந்திடும் துயரதை துரத்திடும் பரமனே!
எப்படித்தான் நாம் உமை மறப்போமோ?
பண்பின் சிகரமாய் பாசத்தின் பிறப்பிடமாய்
எல்லோர்க்கும் நல்லவராய் வாழ்ந்து
எல்லோரையும் வாழவைத்தவரே
உங்கள் ஊக்கமும் உழைப்பும் ஓய்வு பெற்றதோ
கதிகலங்கி நிற்குமிந்தக் காலமதைத் தந்தானோ?
எங்குதான் உமைக் காண்போம் இதயமது தவிக்கிறதே...
ஆண்டுகள் இரண்டு கடந்தாலும்
எம் நெஞ்சில் நிழலாடும் உங்கள் உருவம்
எம் மனதில் உருளும் உங்கள் சிரிப்பு
எம் மனதில் நிலைத்திருக்கும் உங்கள் வார்த்தை
எம் மனதை கலைத்திருக்கும் உங்கள் பிரிவு என்றும் அகலாது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.