1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இராசரட்ணம் அருள்சோதி
1966 -
2023
அல்லைப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசரட்ணம் அருள்சோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:15/03/2024.
எம்மை விட்டு நீ பிரிந்து
ஓராண்டு ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது சகோதரனே..!
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே
இருக்கும் சகோதரனே..!
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
உதயசோதி - சகோதரன் குடும்பத்தினர்.