யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜலிங்கம் ராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திரும்பும் திசையெல்லாம் உன் நாமம்-ஓடும்
இரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்
உன்வியர்வைத் துளிகள்தான் நாம் படிக்கும் இதிகாசம்
நாடுபல சுத்தி வந்தும் எம் முகம்காண
அநுதினமும் ஓடி வந்தாய் - உன்
அனுபவத்தை எல்லாம் அள்ளித்தந்தாய்
ஒரு ஆசானாய் உலகத்தையே சொல்லித்தந்தாய்
எத்தனையோ துன்பத்திலும் - நீ
யாரையுமே நொந்ததில்லை
நேர்மை வழி போகும் ஒரு தேரானாய் - நாம்
நிலைத்து நிற்க எமக்கு நீ வேரானாய்
வறுமையை நீ சொன்னதில்லை - என்றும்
வாடி மனம் நின்றதில்லை - எதையுமே
தனக்கென்று நீ இறுதிவரை எண்ணவில்லை
பாசத்தால் கண்டித்து பண்பால் புடம்போட்டு
ஒழுக்கமே முகவரி என - எம்
நெஞ்சமதில் எழுதிச்சென்ற ஆசானே
நாட்கள் தான் நகர்ந்தாலும் - எம்மை
வளர்த்த பாசம் தான் மாறாது
ஏழு ஜென்மத்திலும் நாம் பட்ட கடன் தீராது
நீயில்லா இடைவெளியை நிரப்ப முடிதெனினும்
நீதி வழி நடந்த உன் பொற்பாத தடங்களிலே
கண்ணீர் பூக்களால் அஞ்சலி செய்கிறோம்
மனைவி, மக்கள், மருமகள், பேரப்பிள்ளைகள்
Just one last chance, I wish I could get to hug you. Then I would hold you tight and never let go