10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசலட்சுமி கணேசலிங்கம்
(குழந்தை)
வயது 59

அமரர் இராசலட்சுமி கணேசலிங்கம்
1955 -
2015
வசாவிளான், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 29-07-2025
யாழ். வசாவிளான் காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜலட்சுமி கணேசலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் பத்தாகியும் எங்கள் இதயங்களில்
என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!
ஆடி முதல் செவ்வாய் அன்று
எங்கள் அம்மாவின் நாடியோட்டம் நின்றதேனோ...
உங்களைப் பெற்றவர்கள் வைத்த பெயர்
குழந்தை அம்மா ! ஆனால் எங்களைப் பெற்றபின்பும்
நீ ஒரு கைக்குழந்தை என நாம் இருந்தோம்
கைதவறி எங்கு சென்றாய்...
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
உதயரேகா(மகள் -ஜேர்மனி)