Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1969
இறப்பு 22 DEC 2018
அமரர் இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன்
வயது 49
அமரர் இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் 1969 - 2018 கரம்பன் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-12-2023

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?

வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஐந்து ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!

அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு ஐந்தாகி​ விட்டது

ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
 நீங்கள் இப்பூவுலகில் இல்லை

ஆலமரமாய் நின்று
 எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால்
எம்மை நாடறிய வைத்தீர்கள்

குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
 இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
 எமை வாட்டுகின்றது அப்பா

இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஓடி
 மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
 என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Fri, 04 Jan, 2019