யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
எத்தனை உறவுகள் இருந்தாலும் தோள்சாய அப்பா
இல்லையே என கதறி அழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்கவிட்டு வழி தெரியா தூரம்
விரைந்தோடி சென்றதேனோ ?
அன்புள்ளங்கொண்ட ஆருயிர் அப்பாவே!
நீங்கள் இல்லாமல் நாங்கள் காற்றில்
அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!!
வாழ்க்கைப் பயணத்தில்
வலிக்குமேல் வலி சுமந்து
வற்றாத ஊற்றாக வலி தந்த காயங்களுடன்
ஒவ்வொரு நாளும் இழப்பின் வலியை
புரிந்து வாழ்கின்றோம்.
நீங்கள் மறைந்த நாள் முதலாய்
நிம்மதி எங்களுக்கு இல்லை அப்பா!
நினைவிழந்து செயலிழந்து
நிற்கதியாய் நிற்கின்றோம் அப்பா!
என்றும் உம் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்...