யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை சிவபுரம் முல்லைத்தீவு ரோட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபால் தானியேல் முத்துசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்றானாலும் அப்பா - எங்கள்
அன்புத் தெய்வமே உங்கள் முகம் தேடி
தந்தையே மூன்று ஆண்டு என்ன மூன்று யுகம்
கடந்தாலும் ஏதோவொன்றாய்
உங்கள் ஞாபகம் அப்பா...
ஏன் இந்த நிலைமை எமக்கு
எம்மை அரவணைத்து வழி காட்ட யாரும்
இல்லாமல் தவிக்கின்றோம்!
எல்லாம் எமக்கு சொல்லித்தந்த நீங்கள்...
நீங்கள் இல்லாமல் வாழ்வதற்கு
சொல்லித் தரவில்லையே!
வாழ்வு இந்த உலகத்தில் நிஜமில்லை
கடவுளும் உண்மையில்லை
என்று உணர்ந்தோம் உம் பிரிவால்!
ஒரு முறை எம்மிடம் திரும்பி வாருங்கள்
நீர் வாழ்ந்த இந்த உலகில் உமை விட்டு
வாழ பிடிக்கவில்லை...
எங்கள் இதயங்களெல்லாம் நொருங்க
எங்களைத் தவிக்க விட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...