Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 OCT 1953
இறப்பு 26 DEC 2021
அமரர் இராஜகோபால் தானியேல் முத்துசாமி
வயது 68
அமரர் இராஜகோபால் தானியேல் முத்துசாமி 1953 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை சிவபுரம் முல்லைத்தீவு ரோட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபால் தானியேல் முத்துசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு என்னும் விழுதினை
 ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
 பகலவன் போல் பரப்பி
 இல்லறம் என்னும் இன்பத்தை
 இமை போல் காத்து நின்றவரே

நீங்கள் பிரிந்து
 இரண்டு வருடம் ஓடிப்போனது
 இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்

உழைப்பை உரமாக்கி
 பாசமாய் பணிவிடைகள்
 பல செய்து வாழ்க்கை எனும் பாடத்தை
 எமக்கு கற்றுத் தந்த
 எமது உயிர் தந்தையே
 இராண்டு ஆண்டுகள் கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
 தினமும் வாட்டி வதைக்கின்றது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 29 Dec, 2021
நன்றி நவிலல் Wed, 26 Jan, 2022