முல்லைத்தீவு உணாப்பிலவைப் பிறப்பிடமாகவும், மாமூலையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை செல்லப்பா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இராசதுரை மாமாவின் இறுதி நிகழ்வின் போது ... நீறணிந்த நெற்றி நடுவில் சந்தணப் பொட்டு மகிழ்ச்சியான முகத்தில் கணமும் மலரும் நிறைய சிரிப்பு. நெஞ்சில் வஞ்சகம் இல்லை நேர் நின்ற பார்வை மனதில் அஞ்சுவதற்கும்...