யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை பரமேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் Altes Gemeindehaus, Alleenstraße 116, 73230 Kirchheim unter Teck எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.