1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜதுரை பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:31-10-2025
விழியோரம் கசியும் கண்ணீர் துளிகள்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும்
காலனின் வேகச்சுழலில் வீழ்ந்து விட்ட
உங்களை மீட்க எங்களால் முடியவே இல்லை
என்று எண்ணும் முன் ஓராண்டு ஓடிவிட்டதே..
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலம் முழுவதும் எம்மை வயிற்றிலும்
மடியிலும்
தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே...!
அவளை என்றும் மனதில் சுமப்போம்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்