
சுவிஸ் Stans ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜ் மிர்ஷா சொனாக்சி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர்
மறவாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
என் அருமை மகளே! சோனா!!
உன் அம்மா மனம் பரிதவிக்க!
அப்பா உள்ளம் சோர்ந்து நிற்க
உற்றார் உறவினர் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?
என் சோனாகுட்டி
உன் அன்பான மலர் முகம்
அழகன முல்லைச் சிரிப்பு
எங்கள் நெஞ்சை வாட்டி வருடுகிறதம்மா!
நீர் என்றும் உயர்ந்து வாழ்வை என்று
எண்ணியிருந்த கனவு நனவாகும் வேளை
காலன் வந்து உம்மைக் கவர்ந்த மாயம் என்ன?
ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
வந்தாலும் ஆறமுடியவில்லை
தினம் தினம் கொஞ்சிப் பேசியதும்,
சிரித்து விளயாடியதும் நீங்காத நினைவோடு
நின்று துடிக்கிறேன் சோனா!!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
The love and joy that your child brought to us will never be forgotten. We are thinking of you and your family during this tragic time