யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்புடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புள்ள அம்மா!
இன்று நீங்கள் இருந்த இடத்திலெல்லாம்
உங்களுடைய நினைவுகளும்
நீங்கள் காட்டிய அன்பும்,
சிரிப்பும் நிறைந்திருக்கின்றது.
அம்மா உங்கள் பிரிவால்
விழியோரம் கசியும் கண்ணீர்த்துளிகளுடன்
இதயத்தில் வலி நிறைந்த
உங்கள் நினைவுகளை என்றென்றும் சுமந்தபடி
உங்கள் ஆசிகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 07-01-2023 சனிக்கிழமை அன்று நடைபெறும்.