யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தனபாலன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆயிரம் சொந்தங்கள்
அருகில் இருந்தாலும்
அன்னையே உம்மைப் போல
யாரும் இங்கில்லையே!
உங்களுடன் வாழ்ந்த வாழ்வினை
தினமும் எண்ணி தவிக்கின்றோம் - அம்மா
மீண்டும் ஒர் பிறப்பிருந்தால்
நீங்களே எம் தாயாக வரவேண்டும்
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழ்கின்றோம் அம்மா!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரதிகளை அச்சிட்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட அன்னாரின் சகோதரருக்கும், பெறாமக்களுக்கும், மருமக்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.