1ம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை வயது 83 பிறப்பு : 31 MAR 1937 - இறப்பு : 10 MAY 2020
திருமதி புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை 1937 - 2020 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு ஆகிய  இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றீர்களோ அம்மா!
ஆண்டொன்று வரும்போதும்
ஓயவில்லை உங்கள் நினைவலைகள்
அன்பான மலர் முகமும் அழகான முல்லைச் சிரிப்பும்
அகலவில்லை எம் நினைவில்

அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!


முதுமையில் ஒரு மழழையை கண்டோம்
உங்களிடம் அந்த
மழழை மொழி கேட்காது தவிக்கிறோம் நாமிங்கு!

எங்களின் கடைசி நாள் வரைக்கும் உங்கள்
இனிய முகத்தை நினைத்திருப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 10 May, 2020
நன்றி நவிலல் Mon, 08 Jun, 2020