

காலையில் வந்த செய்தி கலங்க வைத்தது நம் உறவுகளை.?.ஏனிந்த அவசரம் சொல்லாமல் போவதற்கு... காலமெல்லாம் கணவன் பணி செய்து..?? கரம் பிடித்த நாள் முதலாய் குடுப்பம் பிள்ளைகள் சொந்தம் பந்தம் என அனைவரையும் கண்ணுக்குள் வைத்து பேணி காத்து வந்தீர்..?.கனப்பொழிதில் கண் மூடி கொண்டது ஏனோ? கள்ளம் கபடம் இல்லா வெள்ளந்தி சிரிப்போடு வரவேற்கும் உங்கள் அன்பு முகம் காணாது கலங்கி நிக்கிறோம் இங்கே?.. கொடிய நோயின் கோரப்பிடியில் கூடி இருந்து ஆறுதல் சொல்ல முடியாமல் குமுறி அழுகின்றோம்.??. அம்மாவின் அன்பு முகம் காணாது கடைசி ஆசை முத்தம் கொடுக்காமல் மகன்கள் படும் வேதனை சொல்ல முடியாத துயரம்அவர்களை தேற்ற முடியாமல் தேம்பி அழுகின்றோம் ?? அம்மாவை காண ஓடோடி வந்திடும் உங்கள் அன்பு செல்வங்கள் வர வழி இன்றி தவிக்கும் தவிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது.....?. வேதனையில் வெந்து விம்மி வெடிப்பதை எப்படி சொல்வது... இன்னும் கொஞ்ச காலம் எம்மோடு இருந்து இருக்கலாம் என்று பிள்ளைகள் ஏங்கும் ஏக்கத்தை தாங்கும் தோள்கள் இருந்தும் போகும் வேதனை... தாங்க முடியாமல் தவிக்கிறோம் தேற்ற வழியின்றி தேம்பி அழுகின்றோம் ?அனைவருக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்கள் ????