
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாக கொண்ட புஷ்பராணி லோகநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று சிவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கலாபூஷணம் சுப்ரமணியம் லோகநாதன்(JP- Retd யாழ்.மாநகர சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதினி, நந்தினி, குமணன், தாமோதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரராசா, காலஞ்சென்ற சௌந்தரராஜன், இந்திராணி, செல்வராணி, சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராஜசேகர்(நவந்தாமில் தட்டாதெரு), மதியழகன்(பிரதி தொழில் ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்), இலங்கேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துவாரகன், தனாதரன், யதுசாரகன், தரங்கினி, தர்மினி, புருஷோத், கீர்த்திகா, சுகிர்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.