யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி கையிலாயநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர்மனதிலும் என்றும்
அனைத்தாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
உங்கள் துணைவன் சமூகப்பணி செய்து
பலருக்கு உதவிய மனிதர் —
அவருக்கு எப்போதும் துணையாய்,
உறுதியாய், அன்போடு இருந்தீர்கள் அம்மா!
உங்களுக்கு சொந்தக் குழந்தைகள் இல்லாவிட்டாலும்
அண்ணன், தம்பி, சகோதர மகன் மகள்களுக்கு
வாழ்வில் உயரச் செய்ய வழிகாட்டி,
அன்பும் ஆதரவும் தந்தீர்கள் அம்மா!
செல்வம் அதிகமில்லாத நிலையிலும்
யாரும் வந்தால் வெறுமனே அனுப்பாமல்,
துணையாய் நின்று உதவி செய்த
உங்கள் கருணை மறக்கமுடியுமா அம்மா!
மாமனார் மறைந்தபின் குடும்பத்தினை
சுமந்தெடுத்த உங்கள் துணைவனுக்கு
நேர்மையும் பொறுமையும் கொண்டு
மூலக்கல்லாய் இருந்தீர்கள் அம்மா!
மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு,
தெய்வநம்பிக்கையுடன் வழிபாடு செய்து,
உயிரில் ஒளியாய் வாழ்ந்தீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.