Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 10 MAR 1974
ஆண்டவன் அடியில் 10 DEC 2021
அமரர் புஸ்பராணி ஜெயாபரன் (புஸ்பா)
ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் - மாகாணக் கல்வி திணைக்களம், கிழக்கு மாகாணம் மற்றும் கட்டடங்கள் திணைக்களம்- கிழக்கு மாகாணம்
வயது 47
அமரர் புஸ்பராணி ஜெயாபரன் 1974 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி ஜெயாபரன் அவர்களின் நன்றி நவிலல்.

பதினேழு ஆண்டுகளாய் தாயாய் தந்தையாய்
தோழியாய் சகோதரியாய் சர்வமும் நீங்களாகி
என்னைத் தனியே இங்கே தவிக்கவிட்டு
தான் மட்டும் தனியாகச் சென்றதேனோ

நாம் இருவருமே உலகம் என்பீர்
எம்மை மட்டுமே சுற்றி சுற்றி வந்தீர்
அம்மாவின் செல்லமல்லோ நான்
அழைத்து நிற்கிறேன் வாங்க

கட்டியணைத்து கன்னத்தில் கொஞ்சிட
கரம் பிடித்து கடைசி வரை நடந்திட
சிரித்துப் பேசி மகிழ்ந்து மடியில் உறங்கிட
மனசு ஏங்குதம்மா மறக்க முடியலம்மா

பிரஷ்விமா என்ற இதழ் இறுதிப் பயணம் சென்றதோ
அம்மாச்சி என்ற வாயும் விடைபெற்றுக் கொண்டதோ
என்றென்றும் எனக்கு நீங்கள் அழகு தேவதையே
நீங்களின்றி எதுவும் இங்கு எனக்கு தேவலையே

சிறிது நேரம் வெளியே சென்றாலும் சிந்தித்திருப்பீர்
அம்மா என ஆயிரம் முறை அழைக்கிறேன்
அமைதியாய் இருக்கிறீர் அசைவொன்றும் இன்றியே
அழுது புலம்புகிறேன் அம்மா உங்கள் அன்புக்காக

கோபமிருந்த போதிலும் கட்டியணைத்துக் கொண்டீரே
கோபமேதும் இல்லை ஆனாலும் கண்டு கொள்ளவில்லையே
செல்லக் குழந்தை இங்கு செய்வதறியாது திகைக்க
சென்ற பயணம் முடிந்து திரும்புவது என்றோ

செல்லம் சென்று வருகிறேன் மா என்றீரே அம்மா
வாசலைப் பார்த்தபடி நானும் காத்திருக்கிறேன் அம்மா
அன்பு அன்னை அரவணைக்க வருவார் என்று

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்