

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பராணி ஜெயாபரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எந்தன் இன்னுயிர்த் துணைவியே!!
முதலில் எனக்குத் துணைவியானாய்
பிறகு என் தோழியானாய்
ஒவ்வொரு வினாடியும்
என்
நாடியோடு நாடியாய் கலந்திட்டவளே!
நிறைவாக மணவாழ்வில்
நிறைவுடன் வாழ்ந்தோம்
பெற்றோரும் உற்றோரும்
களிப்புற கண்டோம்!
நீயிருந்த காலமெல்லாம்
நிம்மதியாயிருந்தோமே
ஏனம்மா எமைப்பிரிந்தாய்
ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம் உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் ஒன்று சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?
பேச்சினிலே நீங்கள்!
சுவாசிக்கும் மூச்சினிலும் நீங்கள்!
எதிலுமே நீங்கள்! எல்லாமே நீங்கள்!!!!!
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய்
பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும்
ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்...
அன்பும், பண்பும், பாசமும், எல்லோருக்கும் உதவி செய்யும், மனப்பாங்கும் உடைய, எங்கள் புஷ்பா அக்கா, இறைவனடி சேர்ந்ததைக் கேட்டு, குடும்பத்தார் அனைவரும் ஆறாத்துயரத்தில் தவிக்கின்றோம்!! இவருடைய இழப்பை...