Clicky

பிறப்பு 30 DEC 1940
இறப்பு 13 MAY 2026
திருமதி புனிதவதி சிவகாந்தா (பூம்பா)
Retired teacher- Naranthanai Ganesha Vidyalayam, St Anthony's Boys College Kotehena and St. Thomas' Preparatory School- Colpetty
வயது 85
திருமதி புனிதவதி சிவகாந்தா 1940 - 2026 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

St Anthony’s OBA 23 MAY 2026 Sri Lanka

சாவகச்சேரி. 23.05.2026. சிவகாந்தா ‘ரீச்சர்’……… என்மேல் அன்பு பெய்தும் என்தொழிலை ஊக்கி நின்றும் நன்மதிப்பாய்ப் பேசியும் நலன்துக்கம் விசாரித்தும் என்நாளும் வேகத்துடன் எம்பள்ளி உயர்ச்சிக்காய் தன்னை அர்ப்பணித்த தாய்எங்கே மறைந்தாரோ? விஞ்ஞானக் கற்பித்தலை விரித்தளித்து மாணவரின் அஞ்ஞானம் அகற்றிநின்று அறிவுகளும் ஊட்டுமிவர் எஞ்ஞானம் என்றாலும் எல்லோர்க்கும் பயன்செய்யும் மெய்ஞ்ஞானத் தொடுகைக்காய் மேலுலகு சென்றனரோ!! புனித அந்தோனியாரின் ‘புனிதவதி’ நீங்களம்மா! மனிதக் குதூகலங்கள் மக்களுக்கு வேண்டுமென்று இனித்த உள்ளத்துடன் இதயத்தை வருடிவிட்ட தனித்துவத்தை நாம்மறவோம் தாள்களிலே அஞ்சலித்தோம்!! ஆன்ம சாந்திபெறவும் அண்டியோர் அமைதியுறவும் ஆண்டவனைப் பிரார்த்திப்பது ச.மார்க்கண்டு. (அம்மையுடன் கற்பித்த முன்னைநாள் ஆசிரியர்)