Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 DEC 1940
இறப்பு 13 MAY 2026
திருமதி புனிதவதி சிவகாந்தா (பூம்பா)
Retired teacher- Naranthanai Ganesha Vidyalayam, St Anthony's Boys College Kotehena and St. Thomas' Preparatory School- Colpetty
வயது 85
திருமதி புனிதவதி சிவகாந்தா 1940 - 2026 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி சிவகாந்தா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

முப்பதொரு நாட்கள் கடக்கிறது ஆனால்,
மூன்று நாட்கள் போல் தெரிகிறது உம் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உங்கள்
உறவுக்கு நிகரில்லை யாருமே!

அம்மா உரிமைகொள்ள ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் உள்ளத்தை புரிந்து
கொள்ள எம் தாய் போல் எவரும்
இல்லை எம் அருகினில்.. 

நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது 

நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
நாட்கள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது 

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது

எத்தனை ஜென்மம் இருந்தாலும்
மறுபடியும் தாயாக நீங்கள்
வரவேண்டும் அம்மா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.