Clicky

பிறப்பு 07 JUN 1978
இறப்பு 12 MAY 2020
அமரர் பிரதீப் சுப்பையா
வயது 41
அமரர் பிரதீப் சுப்பையா 1978 - 2020 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

bas 14 MAY 2020 Netherlands

என் அன்பு சகோதரனுக்கு ஒல்லாந்தில் இருந்து உன் சகோதரத்தின் கண்ணீர் மடல் , நான் உன்னை 2000 இல் இருந்து Antwerpen இருந்த என்னுடைய நண்பன் சதீஸ் ( தற்போது Antwerpen Deurne ) மூலமாக முதல் முதலில் சந்திதோம் அன்றில் இருந்து ஏனோ தெரியவில்லை ஒரு உடன் பிறவாத சகோதரம் கிடைத்து விட்டான் என்று உணர்ந்தேன் மற்றும் மகிழ்ந்தேன், அப்படியே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை பழகி வந்தோம் .நாங்கள் பலதடவை Antwepen இல் சந்தேத்துக்கொண்டோம் அப்பொழுது எங்களுடைய சிறு வயது மற்றும் பாடசாலை அனுபவங்களை பல நாட்கள் பகிர்ந்து கொண்டோம் .நீ அன்றில் இருந்து இன்றுவரை மற்றவர்களுக்கு உதவதில் முதல்வன். நீ ஒரு சமூக சேவகன் , அதுக்கு உன்னுடைய ஆங்கீல புலமையும் வழி அமைத்தது .கிழமையில் இரண்டு முறையாவது Viber மூலம் என்னுடன் தொடர்பு கொண்டு சகோதரம் எப்படி இருக்கிறீர் என்று கேட்கும் ஒரு குரல் இன்று மௌனித்து போனது .தமிழ் பிள்ளைகள் நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும் ,படிக்கும் பிள்ளைகளை ஊக்குவிப்பதில் உனக்கு நிகர் நீயே .அடுத்த பிறவி ஒன்று இருக்குமானால் ,நாங்கள் நிஜ சகோதர்கள் ஆக பிறக்கவேண்டும் . இப்படி நாங்கள் இருவரும் பழகியும் உனது இறுதி நாளில் Corona என்ற அரக்கனால் கலந்து கொள்ளமுடியவில்லை. சென்றுவா சகோதரா !!!! உன் பிரிவால் வாடும் உடன் பிறவாத சகோதரன் பாஸ்கரன் Leiden நெதர்லாந்து

Tributes

Notices

மரண அறிவித்தல் Mon, 18 May, 2020
நன்றி நவிலல் Thu, 11 Jun, 2020