Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 MAR 1941
இறப்பு 08 NOV 2010
அமரர் பூபதி செல்லத்துரை
வயது 69
அமரர் பூபதி செல்லத்துரை 1941 - 2010 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபதி செல்லத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

    எம்முயிரில் கலந்த எம் மனைத் தலைவியே!

எம்மை விட்டு நீ சென்று பத்தாண்டு கடந்ததுவோ..
நம்ப மனம் மறுக்கிறது உனை எண்ண மனம் அழுகிறது
ஆருயிரான எம் அம்மா!
எம்மை நேரியராய் வளர்த்து செம்மையுற வாழவைத்த தெயவமே!
வாழ்வாங்கு வாழ்ந்து வானுறைந்து
ஆண்டுகள் பத்து ஆனதம்மா
மீண்டுமொரு கணம் காணமாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறதே எங்கள் மனம்
கண்கள் கசிந்தொழுகி நெஞ்சம் கனக்கிறது
நெடுந்தொலைவு சென்ற எங்கள் அம்மாவை நினைத்து
உங்கள் பிள்ளைகளாய் பிறக்க பேறுபெற்று வந்தோம் அம்மா
நேசம் குறையாத நெடுவுறவாய்
உங்கள் மருமக்கள் வாடுகிறார்.
பேரப்பிள்ளைகளோ அம்மம்மா, அப்பம்மா போலவொரு
அருந்தெய்வம் இல்லையேன கண்கலங்கி நிற்கின்றார்
ஆண்டுகள் பத்து ஓடுயதம்மா!
ஆனால் எம்முள் உறைந்து போன நினைவுகள் உயிருள்ளவரை நீளும்மா!
காலம் உயிர் பிரிந்து கலங்க வைக்கும் எனினும்
தெய்வமாய் இருந்தெமது குலம் காக்க வேண்டுமம்மா

உங்கள் பிரிவால் வாடும் கணவர், பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices