Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பூபாலசிங்கம் தனபாக்கியம் 2022 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், மட்டக்களப்பு, கொழும்பு தெஹிவளையை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் தனபாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

மூன்றாண்டு ஆனதுவோ அன்னையவள் பிரிந்து?
கண்களில் தாரையாய் நீரது வழிந்தோட நீங்கள்
விண்ணகம் விரைந்து சென்றதேனோ – மண்ணில்
புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!

பொழிந்த உங்கள் பாசத்தினை எண்ணி
விழியிலே வழிந்தோடும் நீரதைத் துடைக்க
வழிபார்த்து வாசலில் காத்துள்ளோம் – மீதிக்காலமதைக்
கழிக்கும் வகைதெரியாது வாடுகிறோமம்மா!

தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது

ஆண்டுகள் மூன்றல்ல நம்மூச்சுள்ள
வரை உங்களைமறவோம் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்