1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பூபாலசிங்கம் தனபாக்கியம்
இறப்பு
- 16 FEB 2022
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், மட்டக்களப்பு, கொழும்பு தெஹிவளையை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் தனபாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று!
ஆனாலும்
நாம் அழுகின்றோம்
அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும்
எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம்
சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
அம்மா உங்கள் நினைவோடே...!
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்...!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்