2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பூபாலசிங்கம் தனபாக்கியம்
இறப்பு
- 16 FEB 2022
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், மட்டக்களப்பு, கொழும்பு தெஹிவளையை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் தனபாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-02-2024
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டிரண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
பாசமழை பொழிந்து நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அம்மா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அம்மா...!
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்