Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 APR 1937
இறப்பு 18 NOV 2021
அமரர் பூமாவதி தனிநாயகம் 1937 - 2021 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூமாவதி தனிநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அம்மா!
மூன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!

அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!

எமைப் பிரிந்தவளே! ஏன் எமைப் பிரிந்தாய்!
ஐயமில்லை! ஒன்று இரண்டு ஏன்
ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உமை மறவோம் உங்கள்
நினைவுகளைச் சுமந்து வாழ்வோம்!


பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 20 Nov, 2021
நன்றி நவிலல் Fri, 17 Dec, 2021